திருப்பூரில் பால் விலையை உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பால் விலையை உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் வீரபாண்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூரில் பால் விலையை உயர்த்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூரில் வீரபாண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பசும்பால் லிட்டர் ரூ.42ம், எருமை பால் லிட்டர் 52 என கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பால் வழங்க வேண்டும், பால் கொள்முதல் 50 லட்சம் அளவுக்கு உயர்த்த வேண்டும். பால் விற்பனையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
photoshop ai tool