நூல் விலை ரூ.30 உயர்வு: பின்னலாடைத்துறையினர் கவலை

நூல் விலை  ரூ.30 உயர்வு: பின்னலாடைத்துறையினர் கவலை
X
நூல் விலை ரூ.30 உயர்ந்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை துறையின் மூலம், 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை, கடந்தாண்டு துவக்கத்தில் உயர்ந்தது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நூல் விலை உயராமல் இருந்தது. இதற்கிடையில் இன்று முதல், நூல் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்து, ரூ.350 க்கு விற்கப்படுகிறது. ஒரே நேரத்தில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்ததால் பின்னலாடை துறையினர் கவலை அடைந்து உள்ளனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பின்னலாடை துறையினர் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story