நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கச்செய்ய வேண்டும்: அமைச்சர் வலியுறுத்தல்

நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கச்செய்ய வேண்டும்: அமைச்சர் வலியுறுத்தல்
X

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துத்துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்

நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கச்செய்ய வேண்டும் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அறிவுரை திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துத்துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார் கள். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். மாவட்ட வரு வாய் அதிகாரி ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ரு தன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்)வரலட்சுமி, கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பேசியதாவது: அனைத்து துறை அலுவலர் களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப் படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் அனைத்து வளர்ச்சி திட்டப்பணி களும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப் பான முறையில் மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். திட் டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அர சின் நலத்திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்'என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!