திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் பிரசாரம்

திருப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு  ஆதரவாக வானதி சீனிவாசன் பிரசாரம்
X

திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் வானதி சீனிவாசன்.

திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக.,தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. இதில், பாஜக.,சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பிரச்சாரம் செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில் வேல் மற்றும் மாநிலச் செயலாளர் மலர்கொடி,மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுசெயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!