திருப்பூர் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
X
திருப்பூர் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு, பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் அமைந்து உள்ளன. 60 வார்டுகளிலும் 776 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 60 மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

திருப்பூர் மாநகராட்சி தேர்தல் அலுவலர் கிராந்திகுமார், பயிற்சி வகுப்பு தொடங்கி வைத்தார். பயிற்சியாளர் மாரிமுத்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை குறித்து விளக்கினார். இயந்திரங்கள் முறையாக சரிபார்த்து ஓட்டுப்பதிவு தொடங்க வேண்டும். ஓட்டுப்பதிவு நிறைவு பெற்ற பின், முறையாக சீல் வைத்து திரும்ப ஒப்படைக்க வேண்டும், என விளக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!