தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா தெரிவித்து உள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும், காங்கயம் ரோட்டில் இருந்து முதலிபாளையம் பிரிவு, பெருந்தொழுவு ரோடு வழியாக கோவில் வழி தற்காலிக பஸ் நிலையம் செல்ல வேண்டும். பின் அதே வழியில் திரும்பி செல்ல வேண்டும்.
அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பண்ணாரி ஆகிய இடங்களில் இருந்து வரும் பஸ்கள், குமார் நகரில் உள்ள திருப்பூர் பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மைதானத்துக்கு வந்தடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி அதே வழியில் திரும்ப செல்ல வேண்டும்.
ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து ஊத்துக்குளி ரோடு வழியாக வரும் பஸ்கள், கூலிபாளையம் நால்ரோட்டை அடைந்து வாவிபாளையம், நெருப்பெரிச்சல் ரிங்ரோடு வழியாக பூலுவப்பட்டி சென்று, புதிய பஸ் ஸ்டாண்டை சென்றடைய வேண்டும்.
ஊத்துக்குளி ரோட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சபாபதிபுரம் கோர்ட் ரோடு வழியாக குமரன் ரோட்டுக்கு செல்ல கூடாது. குமரன் ரோட்டில் இருந்து ஊத்துக்குளி ரோட்டுக்கு அனைத்து வாகனங்களும் செல்லலாம். கோர்ட் ரோடு ஒரு வழி பாதையாக செயல்படும். பல்லடம் ரோட்டில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்லலாம். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu