நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து  பாரதிய  பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூரில், நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், நூல் உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future