திருப்பூரில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

திருப்பூரில் புகையிலை பொருட்களை  விற்பனை செய்தவர் கைது
X
திருப்பூரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் காந்திநகரை அடுத்த ஏபி நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், ஏராளமான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் வைத்திருந்த கடை உரிமையாளர் சந்தோஷ் நிஸான்,48, என்பவரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து 13 கிலோ 600 கிராம் புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!