திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம்
X

திருப்பூர வடக்கு மாவட்ட பாஜ., செயற்குழு கூட்டம் நடந்தது.

அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தில் விடுப்பட்ட 800 குட்டைகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மலர்கொடி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும். அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தில் விடுப்பட்ட 800 குட்டைகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் சீனிவாசன், கதிர்வேல், காடேஸ்வரா தங்கராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!