திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24 படுக்கையுடன் ஒமிக்ரான் தனி வார்டு துவக்கம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில்  24 படுக்கையுடன்  ஒமிக்ரான் தனி வார்டு துவக்கம்
X

திருப்பூர் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள ஒமிக்ரான் தனிவார்டு.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், திருப்பூர் அரசு மருத்துவமனை, காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவேக்சின், கோவிசில்டு ஆகிய தடுப்பூசி செலுத்தி வருவதால் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் துவங்கி உள்ளது. இதன் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் அரசு மருத்துவமனைவில் கொரோனா வார்டுக்கு, அருகில் ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டு உள்ளது. 24 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.


Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings