tirupur education news -தமிழ்வழி கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் : அமைச்சர்
அமைச்சர் அன்பில் பொய்யாமொழி.(கோப்பு படம்)
tirupur news in tamil, tirupur news today, tirupur latest news, Tamilnadu education minister's tirupur visit
திருப்பூரில் நடந்த தமிழ்மொழி கற்போம் தொடக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தமிழ்மொழி கற்போம் திட்டம் தொடக்கவிழா திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டு ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்மொழி கற்போம் திட்டத்தை தொடங்கி வைத்து பபேசும்போது,
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ்மொழியை கற்றுக் கொடுக்கும் திட்டம் முதன் முதலில் திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் மொழியை கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் முதல் மாவட்டமாக திருப்பூர் விளங்குகிறது.
பிற மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 45.5 கோடியாகும். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட தொழிலாளர்களின் குழந்தைகள் என பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்கள் 260 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களின் தாய்மொழியுடன் தமிழ் மொழியும் கற்றுத் தரப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பொதுத் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதேபோல தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியினை மேற்கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வழிக்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் திருப்பூர் மாவட்ட அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து அரசுப்பள்ளிகளில் பெற்றோர் அவர்களின் குழந்தைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு என்னிடம் தரப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முழுமையாக நிறைவேற்றி தரப்படும்'. இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu