திருப்பூர்: ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியம்

திருப்பூர்: ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியம்
X

திருப்பூரில் நடந்த பாஜக., மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

திருப்பூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியமானது அதிமுக.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் பாஜ., அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டு, பாஜக., புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்து இருந்த மதுரை சோழவந்தான் தொகுதி முன்னாள் ஏம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.

இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணிக்கம், பாஜகவில் இணைந்தது அதிமுக.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தவிர, சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ., பழனிசாமி, அமமுக., மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட சிலர் பாஜக.,வில் இணைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!