திருப்பூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி

திருப்பூரில் அரசு பஸ் மோதிய விபத்தில்  நீதிமன்ற ஊழியர் பலி
X
திருப்பூரில் அரசு பஸ் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலியானார்.

திருப்பூர் பூம்புகார் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். வினோத்தும், சக ஊழியர் தினேஷ் ஆகியோர் விஜயமங்கலத்தில் நடைபெற்ற நீதிமன்ற ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள பைக்கில் சென்றனர்.

திருப்பூர் வளர்மதி நொய்யல் பாலம் அருகே பைக் , நம்பியூர் சென்ற அரசு டவுன் பஸ்சும் மோதிய விபத்தில் வினோத் சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்த தினேஷ் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்து திருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!