திருப்பூர் அருகே 12 பவுன் நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை

திருப்பூர் அருகே 12 பவுன் நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருப்பூர் அருகே 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரை அடுத்த கனியாம்பூண்டி அருகே உள்ள கார்த்திக் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கணேசன், கம்ப்யூட்டர் டிசைனர். இவர், கடந்த 30 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தது.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 12 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸில் கணேசன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
smart agriculture iot ai