திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட 5 பார்களுக்கு சீல் வைப்பு

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட 5 பார்களுக்கு சீல் வைப்பு
X

கோப்பு படம்

திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட, 5 டாஸ்மாக் மதுபான பார்களுக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாநகரில், முறைகேடாக பார்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, திருப்பூர் டாஸ்மாக் மேலாளர் தாஜூதீன், மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, ஊத்துக்குளிரோடு இரண்டாவது ரயில்வே கேட். புஷ்பா சந்திப்பு, யூனியன் மில் ரோடு ஆகிய இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்படுவது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட இந்த 5 பார்களையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட பார் உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!