பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்: அக்.,28 ம் தேதி ஏலம்

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்: அக்.,28 ம் தேதி ஏலம்
X

தெற்கு மாநகர போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

திருப்பூர் தெற்கு தாசில்தார் மூலமாக வருகிற 28 ம் தேதி மதியம் 2 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

திருப்பூர் தெற்கு மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிமம் கோரப்படாத 250 இருசக்கர வாகனங்கள் உள்ளன. திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் 79 வாகனங்கள் உள்ளன. இவை அனைத்தும் திருப்பூர் தெற்கு தாசில்தார் மூலமாக வருகிற 28 ம் தேதி மதியம் 2 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு வாகனங்களை பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!