திருப்பூர் ராயபுரத்தில் நாயை சுட்டு கொன்றதாக வதந்தி

திருப்பூர் ராயபுரத்தில் நாயை சுட்டு கொன்றதாக வதந்தி
X

பைல் படம்.

திருப்பூர் ராயபுரத்தில் நாயை சுட்டு கொன்றதாக கூறப்பட்ட வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர், தனது வீட்டில் நாட்டு நாய் ஒன்று வளர்த்து வருகிறார். நாயை மர்ம நபர்கள் சுட்டு கொன்று விட்டதாக பிரியாவுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீஸாருக்கு பிரியா தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நாயை மீட்டு பார்வையிட்டனர். நாயை சுட்டதற்கான அடையாளம் எதுவும் தென்படவில்லை. மேலும், ரோட்டை நாய் கடக்கும்போது வாகனத்தில் அடிப்பட்டு இறந்து இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்