/* */

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன் கழிவுநீர்- மக்கள் அதிர்ச்சி

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டிற்குள் வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூர் எஸ்பி. நகரில் மழைநீருடன்   கழிவுநீர்- மக்கள் அதிர்ச்சி
X

திருப்பூர் எஸ்பி நகரில் வெளியேறும் மழை நீருடன் வெளியேறும் கழிவுநீர்.

திருப்பூர் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழைநீர் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட எஸ்பி நகரில், சாக்கடை வசதி இல்லாததால் மழை நீருடன், கழிவு நீர் சேர்ந்து வீடுகளில் புகுந்தது வருகிறது.

இது குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார்பாடி, எஸ்பி., நகருக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரச்சனை இருப்பதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என கமிஷனர் உறுதி அளித்தார். ஆய்வின்போது, 1 வது மண்டல உதவி ஆணையாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...