திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
X

அடிப்படை வசதி செய்து தர கோரி மாநகராட்சி ஆபீஸில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

அடிப்படை வசதி கோரி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்குமரன் பகுதியில் அடிப்படை வசதி இல்லாததால் சாக்கடை கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், கொசு தொந்தரவு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொது மக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்கள் கூறுகையில், திருகுமரன் பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால், கழிவு நீர் தேங்கி வீட்டுக்குள் வருகிறது. அடிப்படை வசதி தர கோரி மாநகராட்சி ஆபீஸில் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவில் நேரத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறது. அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என மாநகராட்சியில் கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!