திருப்பூரில் அறநிலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூரில்  அறநிலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூரில்  இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் அறநிலைத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு, இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஜாமீனில் வெளிவர முடியாத 79 பி அறநிலையத்துறை சட்ட திருத்தத்தை, தமிழ்நாடு அரசு உடனே திரும்ப பெற வேண்டும். கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது