திருப்பூரில் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான விளக்க கூட்டம்

திருப்பூரில் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான விளக்க கூட்டம்
X

ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விளக்க கூட்டம்.

ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான விளக்க கூட்டம் நடந்தது.

பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பான விளக்க கூட்டம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். மேலும், பொதுச்செயலாளர் சேகர், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். அப்போது பனியன் உற்பத்தி நிறுவனங்கள் சம்பள உயர்வு 32 சதவீதம் தருவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முதல் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் வரை எத்தனை சதவீதம் சம்பள உயர்வு வழங்குவது என்பது குறித்தும், பஞ்சப்படி, பயணப்படி உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் தொழிலாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!