தனியார் மயத்தைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் மயத்தைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் மின் வாரியம் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து திருப்பூரில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநில அரசு மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மத்திய அரசு மின்சாரத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் பல்லடம்–உடுமலை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். தலைவர் அங்குராஜ், அமைப்பு செயலாளர் தங்கவேல், பொருளாளர் சிவராஜ்உள்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai marketing future