திருப்பூரில் போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்

திருப்பூரில் போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்
X

கோப்பு படம் 

திருப்பூரில், போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் போலீஸார் பயன்படுத்திய நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களை ஏலம் விட, எஸ்பி செசன்சாய் அறிவுறுத்தினார்.

அதன் பேரில், திருப்பூரில் போலீஸ் வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டன. அவ்வகையில், 20 க்கும் மேற்பட்டவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு, அவற்றை ஏலம் எடுத்தனர். 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போயின. ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி., ரகு மற்றும் போலீஸார் செய்து இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!