திருப்பூர் மாநகராட்சியில் 30 வார்டுகளுக்கான பாமக வேட்பாளர் ரெடி

திருப்பூர் மாநகராட்சியில் 30 வார்டுகளுக்கான பாமக வேட்பாளர் ரெடி
X

திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த பாமவினர்.

திருப்பூர் மாநகராட்சியில் 30 வார்டுகளுக்கான வேட்பாளர்களை பாமகவினர் இன்று அறிவித்தனர்.

திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் முதல் கட்டமாக 30 வார்டுகளில் போட்டியிடக்கூடிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

திருப்பூர் தாராபுரம் ரோட்டியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு வேட்பாளர் பட்டியிலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்