பெட்ரோல் டீசல் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

திருப்பூர் வீரபாண்டியில் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் வீரபாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்று 100 ரூபாயை கடந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூரில் வீரபாண்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story