வடமாநில பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
பைல் படம்.
திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சகுந்தலா என்பவருக்கு சொந்தமான வீட்டில், வடமாநிலத்தை சேர்ந்த நாராயணிமீனா என்பவர் கணவருடன் குடியிருந்து வந்தார். இவர் வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்ததால், வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தார். அங்கு வீடு பூட்டிய நிலையில் இருந்ததோடு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து திருப்பூர் மத்திய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு, நாராயணி மீனா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான அடையாளம் இருந்தது. இதனால், பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu