நூல் விலையில் மானியம் தேவை: பாஜக., கோரிக்கை

நூல் விலையில் மானியம் தேவை: பாஜக., கோரிக்கை
X

பைல் படம்.

ஜவுளித்துறை பயனடையும் வகையில் நூல் விலையில் மானியம் தர வேண்டும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., தலைவர் சக்திவேல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., தலைவர் சக்திவேல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:

திருப்பூரில் வாழ்வாதாரமான பின்னலாடை தொழிலை கடுமையாக பாதிக்கும் இந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மற்றும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பாஜக முழு ஆதரவை தருகிறது. நூல் விலை பிரச்சனை தொடர்பாக தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், எம்எல்ஏ.,வானதி சீனிவாசன் ஆகியோருக்கு பாஜக சார்பில் கவன ஈர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. நூல் விலை உயர்வு என்பது வியாபாரத்தின் ஒரு பகுதி அல்ல. நாட்டின் வளர்ச்சி,தொழிலாளர் வாழ்வாதாரம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறோம். திருப்பூர் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சி. நூல் விலையில் மானியம் தர வேண்டும். மின்சார கட்டணத்தில் சலுகை தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!