கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் லட்சுமி தியேட்டர் கடந்த அக்டோபர் மாதம் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டப்பட்டறை சேர்ந்த விஷ்ணு என்பவரை, 15 வேலம்பாளையம் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஷ்ணு மீது, 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை கோவை சிறையில் அடைக்கப்பட்ட விஷ்ணுவிடம் அதிகாரிகள் மூலம் இன்று வழங்கப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்