திருப்பூரில் கொமதேக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் கொமதேக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,  கட்சி அலுவலகத்தில் நடந்தது.

திருப்பூரில் கொமதேக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், திருப்பூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட அவைத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அதிகப்படியான இடங்களில் போட்டியிடுவது, கூட்டணி எந்த பகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அங்கு சிறப்பாக பணியாற்றி வெற்றியை கைப்பற்ற பாடுபடுவது, வரும் 26 ம் தேதி கோவை செழியன் பிறந்த நாளை ஒட்டி பூலுவப்பட்டி நால்ரோடு அருகே ரத்ததானம், மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பொருளாளர் வேலுமணி, துணை செயலாளர் தம்பி வெங்கடாசலம், இளைஞரணி செயலாளர் செல்வகுமார், தலைமை நிலைய செயலாளர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!