திருப்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்கள் தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் கபடி  விளையாட்டு வீரர்கள் தேர்வு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்கள் தேர்வு வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் சண்முகம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில் வருகிற 9 ம் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் கெலோ இண்டியா தமிழக அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. இதில், 1.1.2003 க்கு பின்னர் பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். ஆண்கள் பிரிவில் 70 கிலோவும், பெண்கள் பிரிவில் 65 கிலோவும் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் வீரர், வீராங்கனைகள் ஆதார் அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், மார்க் நகல் கொண்டு வர வேண்டும். இதில், தேர்வு செய்யப்படும் வீரர்கள் வருகிற 14 ம் தேதி சென்னையில் மாநில கபடி கழகம் நடந்தும் தேர்வுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!