ஆட்டுக்கல் தொழில் பாதிப்பு: தொழிலாளர்கள் கோரிக்கை மனு

ஆட்டுக்கல் தொழில் பாதிப்பு: தொழிலாளர்கள் கோரிக்கை மனு
X

கற்கள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக  தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

ஊத்துக்குளி பகுதியில் கற்கள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் கற்கள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் மனு அளித்தனர். மனுவில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம், வெள்ளியம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெட்டிக்கடை, திம்மநாயக்கன்பாளையம், ஜேடர்பாளையம் ஆகிய கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பரம்பரையாக ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் உள்ளிட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரோட்டோரம் கடைகள் அமைத்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். மேலும், ஊத்துக்குளி பகுதியில் கிடைக்கும் கற்கள் மூலம் ஸ்வாமி சிலைகள் வடிக்க முடிகிறது. தற்போது கற்கள் தட்டுப்பாடு காரணமாக தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கற்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil