ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி வீரர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி  வீரர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
X
ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி வீரர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி மற்றும் மண்டல துணை தளபதி பதவிகளுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 45 வயதுக்குள் உடல் தகுதி உடைய ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய இடங்களில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்கான மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் ஊர்க்காவல் படை அலுவலங்களில் 1 ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி