கோவில் நிலம் மீட்கக்கோரி திருப்பூரில் இந்து முன்னணியினர் போராட்டம்
கோவில் நிலத்தை மீட்கக்கோரி, திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு, இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் செவந்தம்பாளையத்தில், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. கோவிலை சுற்றி, நந்தம் புறப்போக்கு நிலம் இருந்தது. இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தப்படுத்தி அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டது. தற்போது கோவில் புனரமைப்பு வேலை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஸ்வாமி சிலையை அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்தபோது, நிலத்தில் இருந்து ஸ்வாமி சிலைகளை அகற்றுமாறு வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். கோவில் நிலம் இருந்து இருந்தால் சிலையை அங்கு வைத்து வழிபாடு செய்ய வசதியாக இருக்கும்; எனவே, கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் எனக்கோரி, திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் முன், சங்கு ஊதி நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu