திருப்பூரில் 2 வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூரில் 2 வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

திருப்பூரில் நேற்றும், இன்றும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருப்பூர் மாநகரில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. 65 மில்லி மீட்டர் அளவு பெய்த மழையால் பல்வேறு ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருப்பூரில் இன்றும் தொடர்ந்து 2 வது நாளாக மழை பெய்து வருகிறது. திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கால்நடை வளர்ப்போருக்கு தீவன தட்டுப்பாடு நீங்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
what can we expect from ai in the future