சேலையில் ஊஞ்சலாடிய சிறுமி கழுத்து இறுக்கி பலி

சேலையில் ஊஞ்சலாடிய  சிறுமி கழுத்து இறுக்கி பலி
X
திருப்பூர் ஆலங்காட்டு புதூர் பகுதியில் சேலையில் ஊஞ்சலாடியபோது சிறுமியின் கழுத்து சேலையில் இறுக்கியதில் பலியானார்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி காவிரி. இவர்களுக்கு சரண்12, வைஷ்ணவி10, ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் ஆலாங்காட்டுபுதூரில் வசித்து, பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், பாக்யராஜ் வேலைக்கு சென்று விட்டார். காவிரி அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த வைஷ்ணவி, சேலையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார். அப்போது சேலை கழுத்தை இறுக்கியதில் மூச்சு திணறி, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்