காணாமல் போன மேற்கு வங்காள சிறுமி திருப்பூரில் மீட்பு

காணாமல் போன மேற்கு வங்காள சிறுமி திருப்பூரில் மீட்பு
X
மேற்கு வங்காளத்தில் காணாமல்போன சிறுமி, திருப்பூரில் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.

மேற்கு வங்காள மாநிலம் புஷ்பா அடாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது 17 வயது மகள், கடந்த 5 ம் தேதி காணாமல் போனார். இது குறித்து, பெற்றோர் அம்மாநில போலீஸில் புகார் செய்து இருந்தனர். இந்த புகாரின் பேரில், அனைத்து மாநில போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் சிறுமி தங்கியிருப்பாக திருப்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலில் பேரில், அந்த சிறுமி மீட்கப்பட்டு, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!