ஜெய்வா பாய் மாநகராட்சி பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா

ஜெய்வா பாய் மாநகராட்சி பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா
X

சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா ஜெய்வா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா ஜெய்வா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா ஜெய்வா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரனேவ் பேசுகையில், பெண் குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டும். தவறு ஏற்படும்போது விழிப்புடன் இருந்து, அதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தவறுக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு சட்ட அறிவை வளர்க்க வேண்டும் என பேசினார். இலவச சட்ட உதவி மைய வக்கீல் ஷெர்லின் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
future jobs after ai