சிறுபான்மையினர் அரசு கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீடிப்பு

சிறுபான்மையினர் அரசு கல்வி உதவித்தொகை பெற  கால அவகாசம் நீடிப்பு
X
சிறுபான்மையின மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற பெற டிச., 15 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு.

இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டு இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021–22 ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் 1 முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், ப்ளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, ஐடிஐ, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டப்படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்பவர்களுக்கும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டில் உதவித்தொகை புதுப்பித்தல், புதிதாக விண்ணப்பிக்க தகுதியான மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் டிச.,15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421–2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story