பெண்ணிடம் தகராறு: தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திவிட்டு ஓட்டம்

பெண்ணிடம் தகராறு: தட்டிக்கேட்டவரை  கத்தியால் குத்திவிட்டு ஓட்டம்
X
கத்தியால் குத்தியவர் பயத்தில் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை. போலீஸார் விசாரணை.

திருப்பூர் ஏஎஸ்பி சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்,32, ஏசி.,மெக்கானிக். இவருக்கு ஒரு பெண்ணை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணை, காதலிக்குமாறு தினேஷ் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பெண், தன் ஆண் நண்பரான வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார்,36, என்பவரிடம் கூறியுள்ளார். அவர் தினேைஷ தட்டிக்கேட்டார். அப்போது, தினேஷ், ராஜ்குமாரை கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார். காயமடைந்த அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். வீட்டிற்கு சென்ற தினேஷ், பயத்தில் விஷம் குடித்து விட்டார். அவரையும் மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture