திருப்பூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் இந்திய வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம்

திருப்பூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்  இந்திய வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம்
X

திருப்பூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

திருப்பூரில் பி.எஸ்.என்.எல்- ஐ தனியார்மயமாக்குவதை எதிர்த்து இந்திய வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர்:

பி.எஸ்.என்.எல்., ஐ பாதுகாப்போம், தனியார் கட்டண கொள்ளையை தடுப்போம் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருப்பூர் பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.அருள் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் உமாசங்கர், மற்றும் சஞ்சீவ்,சதீஸ்,சந்தோஷ், இந்தியமாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, சௌந்தரபாண்டியன், பி.எஸ்.என்.எல் மாவட்ட தலைவர் மற்றும் கல்யாணராமன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future ai robot technology