பப்ஜி விளையாடிய கல்லூரி மாணவருக்கு வெட்டு: முதியவர் கைது

பப்ஜி விளையாடிய  கல்லூரி மாணவருக்கு வெட்டு: முதியவர் கைது
X

பைல் படம்.

பப்ஜி விளையாடிய மாணவரால், தூக்கமிழந்த முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் முருகம்பாளையம் அருகே பாறைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். தாராபுரத்தில் ஐடிஐ., 2 ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு சக நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சத்தம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த ராமசாமி, 65 என்பவருக்கு தொந்தரவாக இருந்தது. இது குறித்து முதியவர் ராமசாமி, கார்த்திக்கிடம் கேட்டபோது, அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி, வீட்டுக்குள் சென்று அரிவாள் எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டினார். இதில் காயமடைந்த கார்த்தி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமசாமி, ஏற்கனவே கொலை வழக்கில் சிறையில் இருந்து 3 ஆண்டுக்கு முன் விடுதலையாகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா