திருப்பூரில் அடிதடி வழக்கில் தலைமறைவானவர் போலீசாரால் கைது

திருப்பூரில் அடிதடி வழக்கில் தலைமறைவானவர் போலீசாரால் கைது
X
திருப்பூரில் அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன்,31. இவர், கடந்த 2013 ம் ஆண்டு குமரானந்தபுரத்தை சேர்ந்த சாமி என்பவரின் மளிகை கடையை அடித்து சேதப்படுத்தினார். இது தொடர்பாக, திருப்பூர் வடக்கு போலீஸார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கதிரேசன் தலைமறைவாக இருந்து வந்தார். அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த கதிரேசனை வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்