திருப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம்
திருப்பூர் மாநகரில் தொழில் நகரமாக உள்ளதால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர். இளம்பெண்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது.
பெண்கள் எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கை கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் எஸ்பி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்பி., சசங்சாய் தலைமை தாங்கினார். முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தன்னார்வலர்கள், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசப்பட்டது.மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதி ஏற்கப்பட்டது. கலந்தாய் கூட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu