நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு
X

திருப்பூரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரோட்டரி ஸ்கிரீன் பிரிண்டிங் உற்பத்தி.

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக பல கோடி ரூபாய் வரத்தம் பாதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்படுகிறது. பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருட்களான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால், கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பின்னலாடை உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில், இந்திய பருத்திக் கழகம் இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக நூற்பாலைகளுக்கு பருத்தியை வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பருத்தி கொள்முதல் கழகம் அமைக்க வேண்டும். பின்னலாடை தொழில் துறைக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி முதல் கட்டமாக ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது, என்றனர். இதேபோல் ரோட்டரி ஸ்கிரீன் பிரிண்டிங் உற்பத்தியும் 2 வதுநாளாக நிறுத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil