ரயில்வே ஸ்டேஷனில் கீழே கிடந்த தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

ரயில்வே ஸ்டேஷனில் கீழே கிடந்த தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு
X

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், கீழே கிடந்த தங்கச்செயின் குறித்து, குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்தனர்.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், கீழே கிடந்த தங்க செயின், உரியவரிடம் போலீசார் ஒப்படைந்தனர்.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில், வடக்கு சப் இன்ஸ்பெக்டர் கலாவதி மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நுழைவு வாயில் அருகே, ஒரு பவுன் தங்கச்செயின் கீழே கிடந்தது. அதை மீட்ட போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் செயினை தேடி வந்தனர். அப்போது அவர்களிடம் விசாரித்தில் குழந்தையின் கழுத்தில் கிடந்த செயின் கீழே விழுந்தது தெரியவந்தது. அவர்களிடம், செயினை போலீஸார் ஒப்படைத்தனர். நகைகளை பயணத்தின்போது பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!