திருப்பூர் பேருந்து நிலைய கடைகளை ஆன் லைன் மூலம் ஏலம் விட பாஜக மனு

திருப்பூர் பேருந்து நிலைய கடைகளை ஆன் லைன் மூலம் ஏலம் விட பாஜக மனு
X
திருப்பூர் மாநகராட்சி.
திருப்பூர் பேருந்து நிலைய கடைகளை ஆன் லைன் மூலம் ஏலம் விட பாஜக., சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் பேருந்து நிலைய கடைகளை ஆன் லைன் மூலமாக ஏலம் விட வேண்டும் என பாஜக., சார்பில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண் அளித்த மனுவில், மத்திய அரசின் மிடுக்கான நகர் ( Smart City ) திட்டத்தின் கீழ் திருப்பூர் நகரில் கட்டப்பட்டு வரும் பழைய பஸ் ஸ்டாண்டு மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை ஆளும் கட்சி நிர்வாகிகளின் பெயர் சொல்லி கடை ஒதுக்கீடு செய்து தருவதாக இடைத்தரகர்கள் பணம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய தொழில் முனைபவர்களுக்கும் , நடுத்தர தொழில் முனைபவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பஸ் ஸ்டாண்டு கடைகள் ஒதுக்கீடு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடனும், கணினி ஏல முறையில் ( E - ACTION ) மூலம் நடைபெற வேண்டும் என திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

அடுத்தடுத்து நடைபெற உள்ள பூ மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடும் வெளிப்படைத் தன்மையுடன், கணினி ஏல முறையில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai based healthcare startups in india