லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த  5 பேர் கைது
X

பைல் படம்.

நல்லூர் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த 5 போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகர நல்லூர் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நல்லூர் போலீஸார் செரங்காடு, சுப்பிரமணியநகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது லாட்டரி வைத்து இருந்த மனோகரன், கணேசன், கவாஷ்கர், பழனியப்பன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், திருப்பூர் பிஎன் ரோடு போயம்பாளையம் காய்கறி சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த அருண்குமார், 27 என்பவரை அனுப்பர்பாளையம் போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!