மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன்: அண்ணாமலை

மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன்: அண்ணாமலை
X

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன் என மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை பாஜக தேசிய செயலாளர் அருண்சிங், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்படும் பாஜக., அலவலகம் நவம்பர் 10 ம் தேதி திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். தமிழகம் முழுவதும் பாஜக.,வுக்கு மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகிறது. 10 ம் தேதி விழாவில், ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அலுவலகங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறக்கப்பட உள்ளது. மின்வாரியம் மீதான புகார் விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு தெரிவித்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா