பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு

Robbery News | Gold Robbery
X

வீட்டின் பூட்டை உடைத்து, 14 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு.

Robbery News -வீரபாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Robbery News -திருப்பூர் வீரபாண்டியை அடுத்துள்ள பலவஞ்சிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சரஸ்வதி (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் சரஸ்வதி, கடந்த 12-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, திண்டுக்கல்லில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றார். பின்னர், நேற்று அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த சரஸ்வதி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து, வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது