பணியில் ஒழுங்கீனம்: திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட்

பணியில் ஒழுங்கீனம்: திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட்
X
திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாநகரில் 275 ஊர்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், போக்குவரத்து சரி செய்தல், திருவிழா பாதுகாப்பு, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சரியாக பணிக்கு வராமல் இருந்தது, பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 12 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. எனினும், சரியான அல்லது உரிய விளக்கம் கொடுக்காத காரணத்தால், அவர்கள் 12 பேரையும் பணி நீக்கம் செய்து, காவல் ஆணையர் வனிதா உத்தரவிட்டு உள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு